Indian mushroom 65

தேவையான பொருட்கள்: மஷ்ரூம்-1/2 கி எண்நெய்-பொரிக்க உப்பு-தேவையான அளவு மைதா - 1 மற்றும் 1/2 ஸ்பூன் கார்ன் ப்ளோர்-1 மற்றும் 1/2 ஸ்பூன் அரிசி மாவு- 1 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் கரம் மசாலா - 1/4 ஸ்பூன் சிக்கன் 65 மசாலா - 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் செய்முறை : முதலில் மஷ்ரூமை நன்கு சுத்தம் செய்து செய்து , நறுக்கி வைக்கவும் பின் இதனுடன் எண்ணெய் தவிர , மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும் . பின் இதனை சிறிது தண்ணீர் தெளித்து (நிறைய சேர்க்க கூடாது ) கிளறி 10 நிமிடம் வைக்கவும் . எண்ணெய் சூடாக்கி ,அதில் கிளறி வைத்த மஷ்ரூமை உதிர்த்து பொரித்து எடுக்கவும் . நான் இங்கு ,கலர் பவுடர் சேர்க்க வில்லை .தேவைப்பட்டால் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம் . அவ்வளவுதான் சுவையான ,மணமான , மஷ்ரூம் 65 தயார் .

Comments