இட்லி அரைத்து நன்றாக வர !!!

செய் முறை : 4 பங்கு புழுங்கல் அரிசி 1 பங்கு உளுத்தம்பருப்பு இதில் உளுந்து ஒரு மணி நேரம் ஊறினால் போதும். அரிசி 4 மணி நேரம் ஊறவைக்கவும். தேவையானவை : முதலில் உளுந்தை கிரைண்டரில் போட்டு நன்கு குடையக் குடைய அரைக்க வேண்டும். முதலிலேயே தண்ணீர் அதிகம் ஊற்றாமல் சிறிது சிறிதாக சேர்த்து அரைக்க வேண்டும். உளுந்து நன்கு மசிந்ததும் 7-8 ஐஸ் கட்டிகளை சேர்த்து அரையுங்கள். ஒரு முக்கால் மணி நேரம் அரைத்ததும் உளுந்தை எடுத்துவிட்டு அரிசியைப் போட்டு அரைக்கவும். அரிசியை ரொம்ப வழு வழுப்பாக அரைக்காமல் சிறிது நற, நறவென்று அரைத்து உளுந்துடன் சேர்த்து உப்பு போட்டு கலந்து வைக்கவும். மாவு பொங்கி வந்ததும் 1 ஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து நன்கு கலந்து இட்லி வார்க்கவும். 2 கைப்பிடி வெள்ளை அவலை ஊறவைத்து அரிசி அரைக்கும் போது சேர்த்து அரைத்தாலும் இட்லி நன்றாக வரும்.

Comments