மீன் குழம்பு ரெடி பண்ணுவது எப்படி

தேவையானவை : மீன்- அரை கிலோ தக்காளி-6 பச்சை மிளகாய்-6 வெண்டைக்காய்-100 கிராம் மீன்குழம்பு பொடி-4 ஸ்பூன் மிளகாய் தூள்-அரை ஸ்பூன் புளி- நெல்லிக்காய் அளவு தாளிக்க:- எண்ணெய் வெந்தயம் சோம்பு கடுகு கறிவேப்பிலை வெங்காயம்-2 பூடு-8 பல் செய் முறை : மீனை சுத்தம் செய்யவும். வெண்டைக்காயை இரண்டாக நறுக்கி வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும் (வழவழப்பு தன்மை நீங்க) புளியை அரைமணிநேரம் ஊற வைத்து கரைக்கவும். பின் அதில் மீன்குழம்பு பொடி சேர்த்து கரைக்கவும்.அதிலேயே பச்சை மிளகாய்,வெண்டைக்காய்,தக்காளியை சேர்க்கவும் வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை சேர்க்கவும் பின் புளிகரைசலை சேர்க்கவும் நன்கு கொதி வந்ததும் மீனை சேர்க்கவும் 15 நிமிடங்கள் கொதித்ததும் (மீன் வெந்ததும்) இறக்கவும்.

Comments