கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

சிக்கன் - 1 கிலோ மிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகு தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 காய்ந்த மிளகாய் - 4 எலுமிச்சை - அரை மூடி கலர்பொடி - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்) எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு கருவேப்பிலை - 2 ஆர்க்கு உப்பு - தேவைக்கேற்ப செய் முறை : காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக இடித்து கொள்ளவும். சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசறி பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து பிசறி 5 நிமிடம் வைக்கவும். வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுக்கவும்.சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார். சூடாக பரிமாறவும்..

Comments