ஜடேஜாவை பந்தால் அடிப்பது போல் பயமுறுத்திய தோனி

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் 46வது லீக் போட்டியில் சென்னை அணி மோதியது.இந்த போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்த போட்டியின் போது 6.5வது பந்தை ஹர்பஜன் சிங் வீசினார். அதை வில்லியம்சன் ஷாட் மிட் விக்கெட்டில் அடிக்க அதை தோனி வேகமாக ஓடி எடுத்தார். பந்தை எடுக்க பவுண்டரி லையனிலிருந்து ஓடிவந்த ஜடேஜாவை பந்தை கொண்டு எறிவது போல் தோனி செய்தார். இதை சிறிதும் எதிர்பாராத ஜடேஜா பயந்து போனார். பின்னர் தான் தோனி நகைச்சுவைக்காக செய்தார் என தெரிந்தது.

Comments