வல்லாரைக்கீரை

ஞாபக சக்தியை கொடுக்க இதற்கு இணையாக ஒரு கீரை உலகளவிலேயே கிடையாது என்று கூறலாம். வல்லாரை ஏரி, குளம், குட்டை, வாய்க்கால், வேலி ஓரங்கள் என்று நீர்ப்பரப்பு பரவலான இடங்களில் தான் வளர்ந்து காணப்படும். வல்லாரையை சமையலுக்கு பயன்படுத்தும்போது புளியை சேர்க்க வேண்டாம். புளி வல்லாரையின் சக்தியைக் கெடுத்துவிடும். உப்பையும் பாதியாய் போட்டுதான் சமைக்க வேண்டும். குழந்தைகளுக்கு வல்லாரையை நெய்யால் வதக்கி சிறிதளவு இஞ்சி, இரண்டு பூண்டு கீற்றுகள், சேர்த்து துவையல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் வியாதிகள், நரம்புக்கோளாறுகள், வயிற்றுப்போக்கு முதலியவைகள் எல்லாம் குணமாகும். பற்கள் பளீரென வெண்மையாக : பற்களில் பலருக்கு வண்ணம் படிந்து சிரித்தால் பார்ப்பவர் முகஞ் சுளிப்பார்கள். மஞ்சளைப் போக்க வல்லாரை உதவுகிறது. வல்லாரைக் கீரையைப் பற்களின் மீது வைத்துத் தேய்ப்பதினால் மஞ்சள் போவதோடு, பற்கள் வெண்மையாக பளிச்சிடும். அளவோடு உண்ணுதல் : வல்லாரையை அளவோடு குறைந்த அளவுதான் சாப்பிட வேண்டும். உடம்பை பிழிவதைப் போல் வழி ஏற்படும். எனவே, இக்கீரையை அடிக்கடி உண்ணாமல் பத்து நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடுவதே நல்லது. இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் : ஆயுளைப் பெருக்கும்; குறிப்பாக இரத்தத்தை சுத்தப்படுத்தும்; மூளை பலப்படும்; மாலைக்கண் நோய் நிவர்த்தியாகும்; கை, கால் வலிப்புநோய்களை கட்டுப்படுத்தும்; வயிற்றுக் கடுப்பு நீங்கும்; காய்ச்சலைப் போக்கும்; முகத்திற்கு அழகைத் தரும்; மாரடைப்பு வருவதை தடுக்கும்; பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும்.

Comments