வெந்தயக்கீரை

இக்கீரை பெரும் மருத்துவப் பயன்கள் கொண்டது. பல நோய்களைத் தீர்க்கும். இக்கீரையின் மாறுபட்ட சுவை கசப்புத் தன்மையால் அதிகம் பேர் இதை பயன்படுத்துவதில்லை. மாதவிடாய் கோளாறா: இக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகளை அற்புதமாய் நீக்கிவிடும். இடுப்பு வலியா : இக்கீரையோடு தேங்காய் பால், நாட்டுக்கோழி முட்டை (நீரிழிவு உள்ளவர்கள் மஞ்சள் கருவை நீக்கவும்) கசகசா, சீரகம், மிளகுத்தூள், பூண்டு இவைகளோடு நெய்யையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் இடுப்புவலி பறந்து போகும். இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள்: கபம், சளியை அகற்றுகிறது; மந்தமாய் இருப்பவர்களை சுறுசுறுப்பாக்குகிறது; உடலுக்கு வனப்பைக் கொடுக்கிறது; கண் பார்வையைத் தெளிவாக்குகிறது; நரம்புத் தளர்ச்சியைப் போக்குகிறது; வயிற்றுக்கோளாறுகளை வயிற்று உப்புசம், வயிற்றிரைச்சல், வயிற்றுக்கடுப்பு போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. மார்பு வலியிலிருந்து காக்கிறது; தலைசுற்றலை நிறுத்துகிறது; உடல் சூட்டை தணிக்கிறது.

Comments