அழகிய குளிர் மலை ஹார்ஸ்லி ஹில்ஸ்

ஹார்ஸ்லி ஹில்ஸ் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத் தொடர்ச்சி மலையில், 1,265 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்த அழகிய சிறுநகரம். தம்பதியினர், குடும்பத்தினர் வார இறுதி நாட்களில் கண்டுகளிக்க சிறந்த இடம். கலப்படமில்லாத காற்றும், கம்பீரமான மலைகளும், எண்ணற்ற தாவரங்களும் உங்கள் நாட்களை அழகாக்கும். இங்கு மலையேற்றம், 'ஜோர்பிங்' போன்ற சாகச செயல்பாடுகளிலும் ஈடுபடலாம். திருப்பதி - 160 கி.மீ., பெங்களூரு - 165 கி.மீ., அருகிலுள்ள முக்கிய நகரங்கள்.

Comments