குளிர்பானத்திற்குக் கொடுக்கும் காசுக்கு திராட்சை பழத்தை வாங்கி சாப்பிடுவதே சிறந்தது

* குளிர்பானத்தில் வைட்டமின், தாது உப்புக்கள், மாவுச் சத்து எதுவும் இல்லை. * வயிற்றில் அமிலச் சுரப்பு (அஸிடிட்டி) உருவாகி செரிமானக் கோளாறு வரும். * வயிற்றில் வாயுத் தொல்லை உருவாகும். * உடல் பருமன் ஏற்படும். * செயற்கைக் கலர் (சிந்தடிக்) சேர்க்கப்படுவதால் உடல்நலம் கெடும். * சுவைக்குச் சேர்க்கப்படும் இரசாயனங்களால் கேடு. * நார்ச்சத்து இல்லை. * கொடுக்கும் காசுக்கு பயன் இல்லை கேடு அதிகம். குளிர்பானத்திற்குக் கொடுக்கும் காசுக்கு திராட்சை பழத்தை வாங்கி நன்றாக அலசி மென்று சாப்பிட்டால் எவ்வளவு பயன் தெரியுமா? திராட்சையின் நன்மைகள் * வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், தாது உப்புக்கள் கிடைக்கிறது. * நார்ச்சத்து முழுமையாய் கிடைக்கும். * இதயம் வலுப்பெறும் * மென்று சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள், தடைகள் வலுப்பெறும். * உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் கிடைக்கும். * உமிழ் நீர் அதிகம் கலப்பதால் உடல் நலம் பெருகும். * நோய் எதிர்ப்பாற்றல் வளரும். * எலும்புகள் வலுப்பெறும். #குறிப்பு: பழச்சாறு பருகுவதைவிட பழமாக மென்று சாப்பிடுவதே சிறந்தது. பழச்சாறு சாப்பிட்டால் அய்ஸ் சேர்க்க வேண்டாம். ஜீனி சேர்க்க வேண்டாம். அய்ஸ் அசுத்த நீரில் செய்கிறார்கள். அதிலுள்ள கிருமி அய்ஸ் மூலம் நமக்கு வந்து பல நோய்களை உண்டாக்கும்.

Comments