அதிரசம்

வெல்லப் பாகில் அரிசி மாவைக் கலந்து மூன்று நாள் புளிக்கவைத்து, அதை வடைபோல் தட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு வெந்தபின் எடுத்து, கிண்ணத்தால் அமுக்கித் (எண்ணெய்யை வெளியேற்றி) தட்டையாக்கினால் அதுதான் அதிரசம். எண்ணெய்ப் பண்டங்களில் கேடு பயக்காத தின்பண்டம். மென்மையும், இனிமையும், சிறப்பான சுவையும் உடைய இப்பண்டத்தைப் போன்று உலகில் எவரும் செய்ததில்லை.

Comments