அழகிய குளிர் மலை கெம்மனகன்டி

கெம்மனகன்டி கர்நாடக மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில் பாபா புதன்கிரி மலைத்தொடரில் அமைந்துள்ள அழகிய மலைநகரம் தான், கெம்மனகன்டி. அழகிய தோட்டங்கள், நுரை ததும்பியோடும் மலை நீரோடைகள், அழகிய ரிசார்ட்கள், பச்சைப் பசேல் பயிர்கள் என, திரும்பும் இடமெல்லாம் அழகுடன் காட்சியளிக்கும் இந்த இடம், கடல்மட்டத்தில் இருந்து, 4,600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இயற்கையுடன் மட்டுமே உறவாட விரும்புகிறவர்கள், கோடையில் சில நாட்கள் இளைப்பாற சிறந்த இடம் இது. இயற்கையின் பிரம்மாண்டத்தை காண இங்குள்ள, இசட் பாயின்ட் சரியான இடம். ஷாந்தி அருவி, ரோஸ் கார்டன், ஹெப்பே அருவி - 8 கி.மீ., கல்லாத்தி அருவி - 10 கி.மீ., கர்நாடகத்தின் உயர்ந்த சிகரங்களான முல்லையனகிரி மற்றும் பாபா புதன்கிரி ஆகியவையும் அருகிலுள்ளன. இது, சிக்மகளூருவில் இருந்து, 53 கி.மீ.,யிலும், பெங்களூரில் இருந்து 277 கி.மீ., யிலும் உள்ளது. பருவ மழைக்காலம் தவிர்த்து, ஆண்டு முழுவதும் பார்க்கக் கூடிய இடம் இது.

Comments