இந்நாளின் தொகுப்பு தகவல்

1264 – இங்கிலாந்தின் மூன்றாம் என்றி மன்னர் பிரான்சில் கைது செய்யப்பட்டார். சைமன் டி மொர்ஃபோர்ட் இங்கிலாந்தின் ஆட்சியாளரானார். 1607 – ஜேம்சுடவுன், வர்ஜீனியா ஆங்கிலேயக் குடியேற்றப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1610 – பிரான்சின் நான்காம் என்றி மன்னர் கொல்லப்பட்டார். பதின்மூன்றாம் லூயி முடி சூடினார். 1643 – பதின்மூன்றாம் லூயி இறக்க, அவரது 4-வயது மகன் பதினான்காம் லூயி பிரான்சின் மன்னனானான். 1796 – பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார். 1800 – ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரை பிலடெல்பியாவில் இருந்து வாசிங்டன், டி. சி.க்கு மாற்றும் நடவடிக்கை ஆரம்பமானது. 1811 – பராகுவாய் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. 1861 – எசுப்பானியா, பார்சிலோனாவில் 859-கிராம் எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்தது. 1879 – 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர். 1900 – கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின. 1931 – சுவீடனில் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க காவற்துறையினர் சுட்டதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 1939 – பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெதினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார். 1940 – இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்துச் சண்டை: நெதர்லாந்து செருமனியிடம் சரணடைந்தது. 1943 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியாவின் செண்டோர் என்ற மருத்துவக் கப்பல் குயின்ஸ்லாந்துக்கருகில் செருமானிய நீர்மூழ்கிக்கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 268 பேர் கொல்லப்பட்டனர். 1948 – இசுரேல் தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி தற்காலிக அரசையும் அறிவித்தது. அரபு நாடுகள் இஸ்ரேலைத் தாக்கத் தொடங்கின. அரபு - இசுரேல் போர் ஆரம்பமானது. 1955 – பனிப்போர்: சோவியத் ஒன்றியம் உட்பட எட்டு கம்யூனிச நாடுகள் இணைந்து வார்சா உடன்பாடு எனப்படும் தற்காப்பு ஒப்பந்ததில் கையெழுத்திட்டன. 1965 – இலங்கையில் ரோகண வீஜயவீர மக்கள் விடுதலை முன்னணி என்னும் அரசியற் கட்சியை ஆரம்பித்தார். 1973 – ஸ்கைலேப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் விண்ணுக்கு ஏவப்பட்டது. 1976 – யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர். 1988 – ஐக்கிய அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். 2004 – டென்மார்க்கின் முடிக்குரிய இளவரசர் பிரெட்ரிக், ஆத்திரேலியாவைச் சேர்ந்த "மேரி டொனால்ட்சன்" என்னும் பெண்ணை திருமணம் புரிந்தார். பிறப்புகள் 1657 – சம்பாஜி, இந்தியப் பேரரசர் 1771 – இராபர்ட்டு ஓவன், வேல்சு தொழிலதிபர், சமூக செயற்பாட்டாளர் 1883 – அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், இந்திய வழக்கறிஞரும், அரசியல்வாதி 1907 – அயூப் கான், பாக்கித்தானின் 2வது அரசுத்தலைவர் 1909 – ஜான் வெய்ன்ரைட் எவான்சு, அமெரிக்க வானியலாளர் 1918 – ஜேம்ஸ் ஹார்டி, அமெரிக்க மருத்துவர், கண்டுபிடிப்பாளர் 1923 – மிருணாள் சென், வங்காள-இந்தியத் திரைப்பட இயக்குநர் 1938 – வகீதா ரகுமான், இந்தியத் திரைப்பட நடிகை 1944 – ஜோர்ச் லூகாஸ், அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் 1948 – பாப் வுல்மர், இந்திய-ஆங்கிலேயத் துடுப்பாளர், பயிற்சியாளர் 1969 – கேட் பிளான்சேட், ஆத்திரேலிய நடிகை 1971 – சோபியா கோப்லா, அமெரிக்கத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் 1984 – மார்க் சக்கர்பெர்க், முகநூலை உருவாக்கிய அமெரிக்கத் தொழிலதிபர் 1987 – சாரீன் கான், இந்தித் திரைப்பட நடிகை 1988 – ராஜேஷ் முருகேசன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் 1989 – ஷீலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

Comments