50 ஆண்டுகளுக்கு முன் சிறுவர்கள் கடைகளில் வாங்கிச் சாப்பிடும் முதன்மையான தின்பண்டம் கடலை மிட்டாய். வேர்க்கடலையை வறுத்து, அதை வெல்லப்பாகில் கலந்து, உருண்டை பிடித்து விற்கப்படுவதே கடலை மிட்டாய். இன்றைக்கு உலகில் விற்கப்படும் அத்தனை நவீனத் தின்பண்டங்களையும் ஒரு பக்கம் வைத்து, கடலை உருண்டையை மறுபக்கம் வைத்து சத்துக்களைப் பட்டியல் இட்டாலும், உடலுக்குக் கேடில்லா நன்மையைப் பட்டியலிட்டாலும் முதலிடம் கடலை மிட்டாய்க்குத்தான்! யாராவது மறுக்க முடியுமா?
கடலை மிட்டாய், வேர்க்கடலை உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பை உள்ளடக்கியது. வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் இரத்தச்சோகை வராது. உடல் வளமாக நலமாக இருக்கும்.
Comments
Post a Comment